தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை, செல்போன் செயலி மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக இலவச தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா மற்றும் இதர தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலக இலவச தொலைபேசி எண் 18004257024 மற்றும் 1950 அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண். 0424-2257901, 2256782, 2251863 மற்றும் 2256524 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும், cVIGIL என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்