கள்ளக்குறிச்சியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டிநினைவு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வருவாய்த் துறை, பொதுப் பணித்துறை, நகராட்சி அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரண்குராலா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா தொடர்பானவழிகாட்டு தல்கள் பின்பற்றுதல்,வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப் பதிவினை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றினை பாதுகாப்பாக வைப்பது, பாதுகாப்புஏற்பாடுகள் செய்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒதுக்கப்பட்டபணிகளை விரைந்து முடித்திடஅறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர்கள் வி.விஜயபாபு, த.மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago