வேப்பூரில் ரூ.27 லட்சம் மதிப்பிலான 34 கிலோ வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பூரில் பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் வெள்ளிக் கொலுசு, குத்துவிளக்கு, தட்டு, காமாட்சி விளக்கு என 34 கிலோ எடையுள்ள ரூ.27 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்து விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
ரூ.2 லட்சம் பறிமுதல்
வானூர் சட்டப்பேரவை பறக்கும் படை அலுவலர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆரோவில் அருகே பொம்மையார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே பைக்கில் வந்தவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் இருந்ததால் அதனை பறிமுதல் செய்தனர்.இதே போல் அவ்வழியாக மற்றொரு பைக்கில் வந்தவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்தை வானூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் பகுதியில் சிவராமன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்றுவாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த காரை சோதனை யிட்டதில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.86 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்து, விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago