இரிடியம் தருவதாகக் கூறி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் முறைகேடு செய்த 4 பேரை விருதுநகர் போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே புதுவிராலிப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன்(41). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு நண்பர் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள் ளது. அப்போது தனது தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் உள்ளதாக விஜயன் கூறியுள்ளார். அதற்கு சவுந்தர் ராஜன், கோவை விமான நிலையத்தில் பொறியாளராக உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இரிடியம் உள்ளதாகவும், அதை வாங்கி வீட்டில் வைத்தால் பிரச் சினைகள் தீரும் என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜயனை சந்தித்த கிருஷ்ணமூர்த்தியும், சவுந்தர்ராஜனும் ரூ.50 லட்சம் கொடுத்தால் இரிடியத்தைத் தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பிய விஜயன், முதல் தவணையாக ரூ.2.50 லட்சத்தை 2019-ம் ஆண்டில் கொடுத்துள்ளார். பின்னர் இரிடியம் விவகாரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்களான கோத்தகிரியைச் சேர்ந்த சுரேஷ், வால்பாறையைச் சேர்ந்த செந்தில் குமார் ஆகியோரும் விஜயனுக்கு அறிமுகமாகியுள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி, சவுந்தர்ராஜன், சுரேஷ், செந்தில்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து பல்வேறு தவணைகளில் விஜயனிடமிருந்து ரூ.44.50 லட்சம் பெற்றுள்ளனர்.
மேலும் இருவரிடம் முறைகேடு
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியைத் தேடி கோவையில் உள்ள அவரது வீட்டுக்கு விஜயன் சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. விஜயனைப் போலவே கிருஷ்ணமூர்த்தி யைத் தேடி மன்னார்குடியைச் சேர்ந்த சங்கர், கணேஷ் ஆகியோர் அங்கு வந்திருந்தனர். குறைந்த வட்டியில் வங்கியில் ரூ.15 கோடி கடன் பெற்றுத் தருவதாக கிருஷ்ணமூர்த்தி தங்களிடம் ரூ.3.50 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.பின்னர், கிருஷ்ணமூர்த்தியை மொபைல் போனில் விஜயன் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் இரிடியத்துக் காக மீதம் தர வேண்டிய ரூ.5.50 லட்சத் துடன் விருதுநகர் ரயில்நிலைய சாலை அருகே வருமாறு கிருஷ்ணமூர்த்தி கூறி யுள்ளார். அதையடுத்து, விஜயனும், மன்னார்குடியைச் சேர்ந்த சங்கர், கணேஷ் ஆகியோரும் விருதுநகர் வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தியை கையும் களவுமாக பிடிப்பதற்காக ஒரு கோயில் அருகே சங்கரும், கணேஷும் மறைந்திருந்தனர். அப்போது, ஒரு காரில் கிருஷ்ணமூர்த்தி, சவுந்தர்ராஜன், சுரேஷ், செந்தில்குமார் ஆகியோர் வந்துள்ளனர். அவர்களிடம் விஜயன் ரூ.5.50 லட்சத்தைக் கொடுத்து விட்டு இரிடியத்தைக் கேட்ட போது, ஒரு தெர்மாகோல் பெட்டியைக் காட்டி அதற்குள் இரிடியம் உள்ளதாகக் கூறியுள்ளனர்.
அதேநேரம், சங்கரும், கணேஷும் அவர்களைப் பிடிக்க ஓடி வந்தனர். இதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தியும் அவரது நண்பர்களும் தெர்மாகோல் பெட்டியுடன் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
போலீஸில் புகார்
இதையடுத்து, இரிடியம் தருவதாகக் கூறி ரூ.50 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதாக கிருஷ்ணமூர்த்தி உட்பட 4 பேர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் விஜயன் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கிருஷ்ணமூர்த்தி, சவுந்தர்ராஜன், சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரை தேடி வரு கின்றனர்.ஒரு தெர்மாகோல் பெட்டியைக் காட்டி அதற்குள் இரிடியம் உள்ளதாகக் கூறியுள்ளனர். பின்னர் மீதி பணத்தை பெற்றுக்கொண்டு காரில் தப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago