வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 விவிபாட் இயந்திரங்கள், திருவள்ளூர் மாவட்ட மத்திய சேமிப்பு கிடங்கில் இருந்து உரிய பாதுகாப்புடன் நேற்று கொண்டு வரப்பட்டது.
முதல்நிலை சரிபார்ப்பு பணி முடிவுபெற்று வாக்குப்பதிவுக்கு தயாராக உள்ள 90 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 90 விவிபாட் இயந்திரங்கள் மூலம் வாக்காளர்களிடையே விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 18 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 18 விவிபாட் இயந்திரங்கள் என்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணுவால் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அந்த இயந்திரங்கள் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளு டன் அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
7,953 விளம்பரங்கள் அகற்றம்
ஆட்சியர் கூறும்போது, “ சட்டப்பேரவை தேர்தலை முன் னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 15 பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 நிலையான கண் காணிப்பு குழுக்கள், 5 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 5 செலவின கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்படுகிறது.மாவட்டத்தில் இதுவரை 29 மதுபாட்டில்கள், 64 வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற சேவை எண்ணில் இதுவரை 135 தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள
5 சட்டப்பேரவை தொகுதி களிலும் இதுவரை 2,194 சுவர் விளம்பரங்கள், 4,517 சுவரொட்டி கள், 456 பதாகைகள், மற்றவை 786 என்று மொத்தம் 7,953 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 8373 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும் 8300271237 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும் புகார் அனுப்பலாம்” என்றார்.
கொடி அணிவகுப்பு
வள்ளியூரில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. வள்ளியூர் கன்கார்டியா பள்ளியிலிருந்து தொடங்கி, பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் அணிவகுப்பு நிறைவடைந்தது.இதுபோல ராதாபுரத்தில் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் அணிவகுப்பு நிறைவடைந்தது.
பணகுடியில் பேருந்து நிலையத்தில் தொடங்கி பஜார் மற்றும் மங்கம்மா சாலை வழியாக பணகுடி காவல் நிலையத்தில் அணிவகுப்பு நிறைவடைந்தது.
இதுவரை 2,194 சுவர் விளம்பரங்கள், 4,517 சுவரொட்டி கள், 456 பதாகைகள், மற்றவை 786 என்று மொத்தம் 7,953 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago