மதுபான கடத்தலை தடுக்க அலுவலர்கள் நியமனம் :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில், முறை கேடாக மதுபானங்கள் விற்பனை செய்வது மற்றும் மதுபானங்கள் கடத்தலைத் தடுக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளநிலையில், திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெறுவதை தடுக்கவும், மதுபான கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்துக்கு உதவி மேலாளர் (கணக்கு) ஐ.சத்யா (செல்பேசி எண் 98408 54703) தலைமையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் வழிகாட்டு அலுவலர் அங்கப்பன் (செல்பேசி எண். 97884 52698), பறக்கும்படை அலுவலர்களான செல்வராஜ் (63695 08087), முருகேசன் (90038 48488), சிதம்பரம் (95780 68978), செந்தில்குமார் (73055 36767) ஆகியோரிடம், மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்