வாகன சோதனையின் போது தேர்தல் அலுவலர்கள் பொதுமக்களிடம் கனி வுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுரை வழங்கினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு பணி தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘தேர்தல் பறக்கும் படை, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தேர்தல் விதி மீறல்கள் குறித்து தினசரி வரும் புகார்களின்பேரில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.
பொதுமக்கள் அளிக்கும் புகாரில் உண்மை தன்மை அறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல்களை அறிக்கை யாக வழங்க வேண்டும்.
கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் அங்கு நடக்கும் நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட அனைத்தையும் பதிவு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வீடியோ கண்காணிப்பு குழுவினர் வழங்க வேண்டும்.
வாகன சோதனையின்போது பொது மக்களிடம் அலுவலர்கள் கனிவாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களிடம் அதிகாரத்தை காட்டக்கூடாது’’ என்றார்.
இதையடுத்து, தேர்தல் நிலை கண் காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அலுவலர் களுக்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிந்துகொள்ள வாட்ஸ்-ஆப் வசதி கொண்ட செல்போன்களை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன் ராஜசேகர், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago