வணிகர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடலூரில் நடந்தது.
வணிகர்களிடையே மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திர சேகர் சாகமூரி பேசியது:
வணிகர்கள் உரிய ரசீதுகள் இல்லாமல் பொருட்களை விற்கவோ அல்லது வாங்கவோ கூடாது.உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். ஆவணங்கள் இல்லாமல் ரூ. 10 ஆயிரம் மதிப்புக்கு மேல் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். எனவே வணிகர்கள் வியாபாரத்திற்காக பணம் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும்.
அரசியல் கட்சியினர் அல்லதுஎவரேனும் குறிப்பிடும் நபர்களுக்கு டோக்கன் அடிப்படையில் பொருட்கள் வழங்கிட தெரிவித்தால் வணிகர்கள், வியாபாரிகள் அவ்வாறு பொருட்கள் வழங்கக்கூடாது. ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆர்டிஜிஎஸ் மூலம் தேர்தல் காலத்தின் போது பணப் பரிவர்த்தனை நடைபெறும் போது அவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். இதர சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
சட்டமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும்,சுமூகமாகவும் தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கு உட்பட்டு நடைபெற வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago