பறக்கும் படையினரால் : ரூ. 12 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

சட்டமன்றத் தேர்தலையொடி தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறதா என்று மாவட்டம் முழுவதும் சோதனை நடை பெற்று வருகிறது.

கடலூர் அடுத்த பச்சையாகுப்பம் பகுதியில் நேற்று காலை பறக்கும் படையினர் வட்டாட்சியர் விஜயா தலைமையில் காரில் வந்த விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்த பிரதீப்என்பவரிடமிருந்து ரூ.1.75 லட்சமும், புதுச்சேரி வில்லியனூர் கோ னேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரிடமிருந்து ரூ.2.50 லட்சமும். உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு கூட்டுச்சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிபைக்கில் வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த முத்து என்பவரிடம் ரூ.7 லட்சம் இருந்தது. விசாரணையில் அவர், தனது சொந்த வேலைக்காக புதுச்சேரிக்கு பணம் எடுத்து சென்றது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து,வானூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங் கரலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்