தேர்தல் பாதுகாப்பு பணிகள் நெல்லை எஸ்பி ஆலோசனை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்பி பேசியதாவது:

போக்கிரி பதிவேடு உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கை களை கண்காணிக்க வேண்டும். வெடிபொருட்கள் வைத்துள்ள குடோன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க வேண்டும். சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருக்கும் எதிரிகளுக்கு நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெற்று அவர்களை கைது செய்ய வேண்டும் என்றார். உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்