நெல்லை அரசு சித்தா கல்லூரியில் - முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாண வர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின.

இக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை கரோனா பரவல் காரணமாக தாமத மாக நடைபெற்றது. நீட் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மொத்தம் 100 இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவ, மாணவியர் கடந்த மாதம் கல்லூரியில் சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கான நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருத்தணி தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர்கள் பங்கேற்று அறிவுரைகள் வழங்கினர். முன்னதாக முதலாமாண்டு மாணவ, மாணவி யரை பூங்கொத்து கொடுத்து மூத்த மாணவ, மாணவியர் வரவேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்