திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலை வழியாக சென்று தூய நெஞ்சக் கல்லூரியை அடைந்தது.
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் ‘எங்கள் வாக்கு, எங்கள் உரிமை, எனது வாக்கு, எனது எதிர்காலம், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்காளர் என்பதில் நாம் பெருமைக்கொள்வோம், சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம்’’ என முழக்கமிட்டப்படி சென்றனர்.
இப்பேரணி தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நிறை வடைந்தது. இதையடுத்து, அங்கு ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் வாக்களிப்போம்’’ என்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட் டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தலை நடத்த தயாராகி யுள்ளோம். வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துரைக்கவே இது போன்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
புதிய வாக்காளர்கள் தங்களது முதல் வாக்கை செலுத்த ஆர்வ முடன் உள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் முறையில் வாக்களிக்க தேவை யான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன் ராஜசேகர், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் உமா, கலைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago