கடலூர் ஆட்சியர் நடத்திய சோதனையில் சிதம்பரத்தில் அதிக பாரம் ஏற்றிவந்த 37 லாரிகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சிதம்பரம் புறவழிச்சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 37 லாரிகளை மாவட்ட ஆட்சியர் பறிமுதல் செய்தார்.

கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று அதிகாலை சிதம்பரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட் டிருந்தார். அப்போது புதுசத்திரம், கிள்ளை,சிதம்பரம் புறவழிச்சாலை ஆகிய இடங்களில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாமூரி லாரிகளை நிறுத்தி விசாரணை நடத்தினார். அதில் லாரிகளில் அதிகம் பாரம் ஏற்றி செல்வதை தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் லாரிகளை பார்வையிட்டு அதிக பாரம் ஏற்றி வந்ததை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து அனைத்து லாரிகளும் போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிகபாரம் ஏற்றி வந்த 37 லாரிகளுக்கும் ரூ. 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்