மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நத்தத்தில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப்.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலையில் திரளான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள் நீராட்டலுடன் மாசித் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்