பிஎச்டி, எம்பில் தகுதி தேர்வுக்கு மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அர.மருதகுட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திலுள்ள பல்வேறு துறைகளில் எம்.பில், பிஎச்டி பட்டப்படிப்புகளுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப் படுகின்றன. தகுதித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள முதுகலை பட்டம் முடித்த மாணவர்கள் தங்களது இறுதி மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதி தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக் கழக இணைய தளத்தில் www.msuniv.ac.in வெளியிடப் பட்டுள்ளது.

நெட், செட், ஜெஆர்எப், கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதி தேர்வின் தேர்ச்சியானது ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். பல்கலைக்கழக இணையதளத் திலுள்ள ஆராய்ச்சி பிரிவு பகுதி யின் இணையதள விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.1,000. வரும் 31-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 8 மற்றும் 9 தேதி களில் இணையதளம் மூலம் தேர்வு நடைபெறும். பல்கலைக்கழக துறைகளில் முழுநேர ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்படும் தகுதிமிக்க ஆராய்ச்சி மாணவர்கள் உதவித் தொகை பெற வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்