நெல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். வண்ணார்பேட்டையில் துணை ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர் ராஜு, இன்ஸ்பெக்டர் கள் ஆடிவேல், மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் நாகலாந்து எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து துணை ஆணையர் கூறும்போது, “மாநகர பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் நடைபெறுகிறதா என கண்காணிக்கப்படுகிறது. மாநகரில் 7 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 25 ரோந்து மோட்டார் சைக்கிள்கள் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. பிரச்சினைக்குரிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர்” என்றார்.

இதனிடையே மாநகர காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நேற்று மாலையில் நடத்தப்பட்டது. பாளையங்கோட்டையில் லூர்து நாதன் சிலை முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம் கோபால சுவாமி கோயில், மார்க்கெட், சமாதானபுரம், பெல் பள்ளி வரையில் நடைபெற்றது. மாநகர போலீஸாருடன் எல்லை பாதுகாப்பு படையினரும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்