வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதி களுக்கும் தலா 10 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் உதவியுடன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம் அமைத்து வாக்களிக்கும் நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘சட்டப்பேரவை தொகுதி வாரியாக பொதுமக்கள் மத்தியில் வாக்குப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலா 10 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்தக்கூடாது. வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இந்த இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்குக்கு கொண்டு வரப்படும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago