திருப்பத்தூர் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் அனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (48). இவர், அனேரி கிராமத்தையொட்டியுள்ள தென்றல் நகர் பகுதியில் தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இதில், 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை தொழிற்சாலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள மின்மாற்றியில் இருந்த மின்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. அதில் நார் கம்பெனி மீது தீப்பொறி விழுந்ததால் தீ பரவியது.

இதில், ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த கயிறு பண்டல்கள் அனைத்தும் தீயில் கொழுந்து விட்டு எரிந்தன. இதைக்கண்ட தொழிலாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். உடனே, திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தினால் நார் தொழிற்சாலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் திருப்பதி நேற்று புகார் செய்தார். அதன்பேரில், காவல் துறை யினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்