செங்கை மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடு தொடக்கம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, விதிமீறல்களை கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார் செய்யவும் வசதியாக, மாவட்டங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதற்காக செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று முதல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியது. இங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பர். மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதற்காக 044 -27433500 என்ற தொலைபேசி எண் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்காளர் அடையாள அட்டை பதிவு, புகைப்பட வாக்காளர் அட்டை அச்சிடுதல் மற்றும் விநியோகம், வாக்குச்சாவடி, தொகுதி விவரங்கள் அறிதல், தேர்தல் அதிகாரிகள் பற்றி அறிதல் ஆகியவற்றுக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஏதேனும் புகார் அல்லது குறைகளை பதிவு செய்யவும், இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்