சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று காவல் துறையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமையில் கள்ளக்குறிச்சியின் முக்கிய வீதிகளில் நடத்தப்பட்ட கொடி அணிவகுப்பில் துணை ராணுவ படையினர், அதிரடி படையினர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசும்போது, "பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். எந்த தகவலாக இருந்தாலும் காவல்துறையினருக்கு எப்போது வேண் டுமானாலும் தெரிவிக்கலாம், தேர்தல் விதிமுறை மீறல்களில் யாரும் ஈடுபட கூடாது" என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர்
கடலூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் நேற்று போலீஸார் அணி வகுப்பு நடைபெற்றது.கடலூர் மாவட்டத்தில் சட்ட பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் எஸ்பி அபிநவ் தலைமையில் நேற்று போலீஸாரின் அணிவகுப்பு கடலூரில் நடைபெற்றது. டிஎஸ் பிக்கள் சாந்தி, தரன், மத்திய துணை ராணுவப் படை ஆய்வாளர் பினு மற்றும் அதிரடி படை , ஆயுதப்படை போலீஸார் என 300 பேர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
கடலூர் டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு முக்கிய சாலைகள், சீமாட்டி சிக்னல், திருப்பாதிரிபுலியூர் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் சென்றடைந்தது.
மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் நேற்று போலீஸார் அணி வகுப்பு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago