நாமக்கல்லில் பறக்கும்படை சோதனையில் காரில் கொண்டுசென்ற ரூ.2.37 லட்சம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்தை நாமக்கல தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் நேற்று நாமக்கல் – மோகனூர் சாலை கொண்டிசெட்டிப்பட்டி அடுத்த குனியமரத்தான் கோயில் அருகே வட்ட வழங்கல் அலுவலர் ரவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோகனூர் அடுத்த பரளியைச் சேர்ந்த கவுரிராஜன் என்பவர் தனது காரில் நாமக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 440 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டைக்குமாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. மேலும், உரிய ஆவணங்களை வழங்கி அப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்