திருச்சி மாவட்டத்தில் 3 மாதங்களில் லாட்டரி விற்ற 107 பேரை கைது செய்த தனிப்படை

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல், லாட்டரி, மது மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களைத் தடுக்கவும், அச்செயலில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காகவும் கடந்த 3 மாதங்களுக்கு முன் எஸ்.பி மேற் பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

லால்குடி பகுதியில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையின்போது, அங்கு சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆங்கரை சுரேஷ்குமார்(41), நன்னிமங்கலம் ப்ளூட்டஸ்(55) ஆகியோரை கைது செய்தனர். மணப்பாறை பகுதியில் நேற்று சோதனை நடத்தி மலைத்தாதம்பட்டி ஜோசப்(45), பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகர் தோமஸ்(52), குணசேகரன்(39), லூர்துசாமி(48), டேனியல் (44), கண்ணுடையான்பட்டி மேலக்களம் சதீஷ்குமார் (33) ஆகியோரை கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்ததாக கடந்த 3 மாதங்களில் 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீ ஸாரை, காவல் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்