திருச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இடும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

கரோனா தடுப்பூசி முதல் கட்டமாக மருத்துவத் துறையி னருக்கும், முன்களப் பணியாளர் களுக்கும் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற் பட்டோர் மற்றும் இணை நோய்கள் உள்ள(நீரிழிவு, ரத்த அழுத்தம்) 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த ரூ.250 செலுத்தியும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும், கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ள விரும்புவோர் https://selfregistration.cowin.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று பதிவு செய்து கொண்டோ அல்லது தடுப்பூசி இடும் மையங்களுக்குச் சென்று நேரடியாக அடையாள அட்டை யைக் காண்பித்து பதிவு செய்தோ தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் முன்பதிவு செய்து கொண்ட பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இடும் பணி தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் நேரில் பார்வை யிட்டார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் ஆண்கள் 129 பேருக்கும், பெண்கள் 151 பேருக்கும் என மொத்தம் 280 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்