சட்டத்துக்கு புறம்பாக சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கக்கூடாது கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்த மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலர் விழி பேசியது: தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங் களில் அச்சகத்தின் பெயர், அச்சக உரிமையாளர் பெயர், முகவரி போன்றவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அரசியல் தொடர்பு டைய சுவரொட்டி, பிரசுரங்களை அச்சடிக்க உரிமை கோருபவரை அடையாளங்காட்டக்கூடிய உறுதிமொழியை 2 சாட்சிகளின் கையொப்பங்களுடன் சம்பந் தப்பட்ட அச்சக உரிமையாளர் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அச்சடிக்கப்பட்ட சுவரொட்டி, பிரசுரத்தின் 4 நகல், அதுகுறித்த விவரங்களை குறிப்பிட்டு 3 நாட்களுக்குள் சுவரொட்டி வெளியிடும் நபரை அடையாளங் காட்டக்கூடிய உறுதிமொழி படிவத்தை அச்சக உரிமையாளர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். சட்டத்துக்கு புறம்பாகவோ, மதம், சாதி, இனம் தொடர்பான ஆட்சேபணைகள் எழும் விதத்திலோ, மொழி, தனிப்பட்ட நபரின் நன்னடத்தை பாதிக்கப்படும் வகையிலோ சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களை அச்சடிக்கக்கூடாது.

மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்றார்.

இதேபோல, வங்கியாளர் களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் கூட்டமும் ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

இதில், கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல்ரஹ்மான், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலால் துறை உதவி ஆணையருமான ஜி.தவச்செல்வம், கிருஷ்ணரா யபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான கே.தட்சிணாமூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE