தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் குடும்பவியல் மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில், “சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்கள், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். முஸ்லிம் தேசத் தியாகிகளின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் குடும்பத்துக்கு தேவைப்படும் உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
கடையநல்லூரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 80 சதவீதம் பெண்கள் படிப்பதால், இந்த கல்லூரியை பெண்கள் அரசு கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும். தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் குடும்பத்துக்கு தேவைப்படும் உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago