திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இருசக்கர வாகனங்களில் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையங்களில் இருந்தும் தலா 3 இருசக்கர வாகனங்கள் வீதம், மொத்தம் 25 வாகனங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ரோந்து பணியை திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையர் னிவாசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்கவும் இந்த ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago