சட்டப்பேரவைத் தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில், காவல் துறையினருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 118 இடங்களில் உள்ள 788 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் (சி.ஐ.எஸ்.எஃப்.) சேர்ந்த 94 வீரர்கள் கோவை வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று அதிகாலை ரயில் மூலம் கோவைக்கு வந்தனர். அனைவரும் ராம்நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுடன் பாதுகாப்புக்குச் செல்லுதல், பதற்றமான இடங்களில் பறக்கும்படைக் குழுவினருடன் இணைந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்தல் போன்ற பணிகளில் இவர்கள் முதல்கட்டமாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு தினத்தன்று பதற்றமான வாக்குச்சாவடிகளில் இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இரண்டாம் கட்டமாக மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான துணை ராணுவத்தினர் கோவைக்கு வர உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago