கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரியஸ் எஸ்டேட் அதிபர் அப்துல்சலாம்(50), கடந்த டிசம்பர் மாதம் காரில் பெங்களூரில் இருந்து, கோவை வழியாக கேரளாவுக்கு சென்றார். ஓட்டுநர் சம்சுதீன்(42) காரை ஓட்டினார். கோவை நவக்கரை அருகே மர்மநபர்கள், அப்துல்சலாம், சம்சுதீனை தாக்கி, காரை கடத்திச் சென்றனர். பின்னர், கடத்தப்பட்ட கார் மாதம்பட்டியில் மீட்கப்பட்டது. காரிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக க.க.சாவடி போலீஸார் விசாரித்து, ஏற்கெனவே 6 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த பாலக்காடு மாவட்டம் கண்ணகி நகரைச் சேர்ந்த சுரேஷை(31) போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago