பள்ளி, வழிபாட்டு தலங்கள் அருகே ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோபி கோட்டாட்சியர் அலுவலகத் தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிதேவி தலைமையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தேர்தல் அலுவலர் பழனிதேவி பேசியதாவது:

அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு இன்றி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகள், கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் அருகில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல் ஆணைய விதி முறைகளின்படி, பிரச்சார கூட்டங்கள் மற்றும் பிரச்சார வாகனங்கள் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும். சுவர் விளம்பரங்கள் எழுத உரிமை யாளர்களின் அனுமதி கடிதம் பெறவேண்டும். கொடிக் கம்பங்கள் அகற்றுதல், அரசியல் கட்சி பெயர் பலகை களை அகற்றுதல் போன்றவற்றை அந்தந்த கட்சியினர் அப்புறப் படுத்தவேண்டும். வாக்கு சேகரிக்கச் செல்லும் போது ஐந்து நபர்கள் மட்டுமே செல்லவேண்டும், என்றார்.

தொடர்ந்து, திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் அனுமதியின்றி அரசியல் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்றும், அவ்வாறு நடத்த அனுமதி அளித்தால், திருமணமண்டபங்கள் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டது. மேலும், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் தங்கும் விடுதியில் தங்கி னால் காவல்துறையி னருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்