100-வது துணை தபால் நிலையம் பெரும்பாக்கத்தில் திறப்பு

By செய்திப்பிரிவு

தாம்பரம் தபால் மண்டலத்தின் சார்பில், பெரும்பாக்கத்தில் 100-வது துணை தபால் நிலையம் இன்று திறக்கப்படுகிறது.

பெரும்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, அங்கு புதிய துணை தபால் நிலையம் இன்று (1-ம் தேதி) திறக்கப்படுகிறது. பெரும்பாக்கம் பஞ்சாயத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 71 ஆயிரம் மக்களுக்கு இந்தப் புதிய தபால் நிலையம் சேவை ஆற்றும். எண் 52, டாக்டர் அம்பேத்கர் சாலை, பெரும்பாக்கம் என்னும் முகவரியில் இந்த தபால் நிலையம் செயல்படும்.

கணினிமயமாக்கப்பட்ட இந்தப் புதிய தபால் நிலையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். கடிதங்கள், பார்சல்கள், விரைவு தபால், பண அஞ்சல், தொலைபேசி மற்றும் காப்பீட்டுக் கட்டணங்களை செலுத்துதல், சிறு சேமிப்பு உள்ளிட்ட சேமிப்பு திட்டங்கள் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு இந்த தபால் நிலையம் வழங்கும்.

தாம்பரம் தபால் மண்டலத்தில் 100-வது துணை தபால் நிலையமாக செயல்படப் போகும் பெரும்பாக்கம் தபால் நிலையத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600 100 ஆக இருக்கும். தாம்பரம் மண்டல, அஞ்சல் நிலையங்களின் மூத்தக் கண்காணிப்பாளர் டி.வி. சுந்தரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்