பிஎஸ்என்எல் புதிய திட்டம் அறிமுகம்

By செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர்களுக்காக, ரூ.47-க்கு ப்ரீபெய்டு-47 என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அளவற்ற குரல் அழைப்பு, 14 ஜிபி இலவச டேட்டா, நாள்தோறும் இலவசமாக 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படும். இந்தச் சலுகை 28 நாட்கள் வரை அமலில் இருக்கும்.

புதிய வாடிக்கையாளர்களுக்காக, பிளான் வவுச்சர்-108 திட்டத்தின் காலம் 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், அளவற்ற குரல் அழைப்பு, தினசரி ஒரு ஜிபி டேட்டா, இலவசமாக 500 எஸ்எம்எஸ் ஆகியவை உள்ளன. மற்ற நிறுவனத்தில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறிய புதிய வாடிக்கையாளர்களுக்காக இலவச சிம் என்னும் சலுகையை பிஎஸ்என்எல் வழங்குகிறது.

இதைத் தவிர, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான எண்களை தேர்ந்தெடுக்க மின்னணு முறையில் ஏலம் வரும் மார்ச் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மின்னணு ஏலம் குறித்த தகவல்களை www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தின் தலைமைப் பொதுமேலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்