தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்காது என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிப்ரவரி 26-ம் தேதி முதல் அமலாகியுள்ளது. இதனால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று முதல் (திங்கள்) தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரையில் நடைபெறாது. இதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் பெட்டியில் இட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago