புதுச்சேரியில் கடும் பனிப்பொழிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி நகரெங்கும் நேற்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தது.

தமிழகம் மற்றும் புதுவையில் வழக்கமாக மார்கழி மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் மாலை முதல் காலை 6 மணி வரை பனியின் தாக்கத்தை உணர முடியும். அதன்பிறகு, தை மற்றும் மாசி மாதங்களில் பனிப்பொழிவு படிப்படியாக குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மாசி மாதம் பிறந்து 10 நாட்களுக்கு மேலாகியும் பனியின் தாக்கம் குறைந்தபாடில்லை.

அதிலும் நேற்று காலை புதுவையில் ஊட்டியை போன்று பனிப்பொழிவு இருந்தது. காலை நெடுநேரமாகியும் பனியின் தாக்கம் குறையவில்லை. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் புகை மூட்ட மாக காணப்பட்டது.

இதனால் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். வாகனங்களில் சென்றோரும், நடைப்பயிற்சி மேற்கொண்டோரும் இந்த பனிப்பொழிவை பார்த்து வியந்தனர். அதுமட்டுமின்றி புதுவைக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் பனிப்பொழிவை ரசித்தபடி கடற்கரை சாலையில் நடந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்