மார்கழி மாதம் வழக்கமாக பனியின் தாக்கம் அதிகமாக இருக் கும். ஆனால் தை, மாசி மாதங்களில் பனிப்பொழிவும், குளிரும்குறைந்து விடும். தற்போது மாசிமாதம் பிறந்து 16 நாட்கள் ஆகியும் கடலூர் மாவட்டத்தில் பனியின் தாக்கம் குறையவில்லை. இரவில் கடுங்குளிர் உள்ளது. அதிகாலை மற்றும் காலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு புகை மூட்டம் போன்று உள்ளது.
அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று அதி காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி காலை 8 மணிக்கு பிறகு எடுத்து செல்லும் நிலை இருந்தது.
குளிர்காலம் இன்னமும் முடிவுக்கு வராததால் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்லும் முதி யவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago