பொன்மலை ரயில்வே பணிமனை இலக்கை விஞ்சி சாதனை

By செய்திப்பிரிவு

கரோனா பரவலால் நேரிட்ட தொய்வுகளுக்கு மத்தியிலும், நிகழாண்டில் ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விஞ்சி பிராட்கேஜ் கோச் பராமரிப்புப் பணியில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை சாதனைப் புரிந்துள்ளது.

இதுதொடர்பாக பொன்மலை பணிமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவலால் நேரிட்ட உற்பத்திச் சரிவை சமன் செய்ததுடன், வாரியம் நிர்ணயித்த இலக்கையும் விஞ்சி பொன்மலை பணிமனை சாதனைப் படைத் துள்ளது.

நிகழாண்டில் 864 பிராட்கேஜ் கோச்சுகளை பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 51 கோச்சுகள் கூடுதலாக பரா மரிப்பு செய்யப்பட்டுள்ளன. மாதத்துக்கு 90 கோச்சுகள் என்ற எதிர்பார்ப்பைத் தாண்டி கடந்த 7 மாதங்களாக மாதத்துக்கு 100 கோச்சுகள் வீதம் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, டீசல் இன்ஜின் பராமரிப்பில் நிதியாண்டில் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே 29 என்ற இலக்கைவிட கூடுதலாக 5 இன்ஜின்கள் பராமரிப்பு செய்து முடிக்கப்பட்டது. இன்ஜின்களுக் கான பவர் பேக்குகள் பராமரிப்பு இலக்கையும் பொன்மலை பணிமனை அடைந்துள்ளது.

பொதுவாக மாதத்துக்கு 20 முதல் 25 வேகன்கள் தயாரிக்கப் பட்டு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மாதத்தில் (பிப்ரவரி) மட்டும் 50 வேகன்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

இதேபோல, பொன்மலை பணிமனை நீலகிரி மலை ரயிலுக் கான நீராவி இன்ஜின்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளது. இதற்கான முக்கிய பாகங் கள் தருவிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நீராவி இன்ஜின் கட்டுமானப் பணி 2021 ஏப்ரலில் நிறைவடைந்து அனுப்பிவைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்