தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமாரிடம் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் நேற்று அளித்த புகார் மனு விவரம்:

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் விதிகளை மீறி விராலிமலை தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, தட்டு உள்ளிட்ட பொருட் களை வழங்கி வருகிறார்.

மேலும், மேட்டுசாலையில் உள்ள அவரது கல்லூரியில் இலவச பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.

எனவே, இலவச பொருட்கள் விநியோகத்தை தடுத்து நிறுத்துவதோடு, பதுக்கி வைக் கப்பட்டுள்ள பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்