வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு இசை வேளாளர் இளைஞர் பேரவை முடிவு

By செய்திப்பிரிவு

திருச்சியில் தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனர்- தலைவர் கே.ஆர்.குகேஷ் தலைமை வகித்தார். வள்ளலார் தமிழ் மன்றத் தலைவர் ஜெய.ராஜமூர்த்தி சிறப்புரையாற்றினார். அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேஷ்வரன் ஆர்.அதிபன், கருணாநிதியின் உதவியாளராக இருந்த கே.நித்தியானந்தம், திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ உள்ளிட்டோர் பேசினர்.

தொடர்ந்து, அமைப்பின் நிறு வனர் தலைவர் கே.ஆர்.குகேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:

மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுத் தொகுப்பில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி முதல்வர் பழனிசாமி மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளார்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பட்டியலில் 109 சாதிகள் உள்ள நிலையில், யாரையும் கலந்தாலோசிக்காமல் வாக்கு வங்கிக்காக தன்னிச்சையாக சுயலாபத்துக்காக அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிமுக அரசின் இந்த நடவ டிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள் ளோம் என்றார்.

இந்தக் கூட்டத்தில், “இசை வேளாளர்கள் பாதிக்கப்படாத வகையில் உள் ஒதுக்கீடு அமைக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மங்கல இசைக் கலைஞர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும். அரசு இசைப் பள்ளிகளை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்