திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு மகுடாபிஷேகம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மகுடா பிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பேறு இல்லாததால், அண்ணாமலையாரை தனது மகனாக பாவித்ததாக புராணங் கள் கூறுகிறது.

இந்நிலையில் போர்க் களத்தில் வல்லாள மகா ராஜா கொல்லப்படுகிறார். இதையடுத்து, அவருக்கு திதி கொடுக்கும் நிகழ்வு, மாசி மகம் நாளில் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஆற்றங் கரையில் நடைபெறும். அதன்படி, மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திதி கொடுக் கும் நிகழ்வு கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தந்தை மறைவுக்குப் பிறகு மகனுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

அப்போது, உற்சவ மூர்த்தியான அண்ணாமலை யாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்