திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து குறைதீர்வு கூட்டங் களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 26-ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வந்த மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்வு கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஓய்வூதியர்கள் குறைதீர்வு கூட்டம், முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம் மற்றும் வட்ட அளவிலான விவசாய குறைதீர்வு கூட்டம் உட்பட அனைத்து குறைதீர்வு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், மக்களின் அடிப்படை தேவைகள் போன்ற முக்கிய குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, மக்களிடம் இருந்து மனுக்களை பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே பெட்டி வைக்கப்பட்டு, அதன் மூலமாக மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப் பட்டதும், குறைதீர்வு கூட்டங்கள் மீண்டும் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago