வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு

By செய்திப்பிரிவு

கோவை விளாங்குறிச்சி அருகேயுள்ள திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(38). இவர், சரவணம்பட்டி அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். ஊரடங்கால் ஹோட்டல் தொழிலில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் கடந்த மாதம் ஹோட்டல் மற்றும் வீட்டைப் பூட்டிவிட்டு, அருண்குமார் குடும்பத்துடன் சொந்த ஊரான சேலத்துக்குச் சென்று விட்டார். இந்நிலையில், அருண்குமாரின் தந்தை தங்கவேல் நேற்று முன்தினம் கோவைக்குத் திரும்பினார்.

வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்