தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த 7 இன்ஸ்பெக்டர்கள், 5 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராமரத்தினம், வாழப்பாடிக்கும், மேட்டூரில் பணிபுரிந்த முரளி, மதுரை வடக்கிற்கும், சேலம் கிழக்கில் பணிபுரிந்த கவிதா ராசிபுரத்துக்கும், சேலம் மேற்கில் பணிபுரிந்த ராஜேஷ்கண்ணா, குடியாத்தத்துக்கும், சங்ககிரியில் பணிபுரிந்த கோகிலா, சேலம் கிழக்கிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, சேலம் மாநகர காவல் துறையில் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், அன்னதானப்பட்டிக்கும், கொண்டலாம்பட்டியில் பணிபுரிந்த புஷ்பராணி, கடும் குற்றத் தடுப்பு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜசேகரன், செவ்வாய்ப்பேட்டைக்கும், இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். செவ்வாய்பேட்டையில் பணிபுரிந்த சுந்தராம்பாள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கன்னங்குறிச்சியில் பணிபுரிந்த நித்யா, பள்ளப்பட்டிக்கும், கடும் குற்றத் தடுப்பு பிரிவில் பணிபுரிந்த தனசேகரன், கொண்டலாம்பட்டிக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கணேசன், அம்மாப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago