காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது எனவும், திமுக அதிக தொகுதிகளை கேட் டால் கொடுப்போம் என்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கி ரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறுவது நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்கின்ற குழுவின் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில், தனுசு, சுவாமிநாதன், இளையராஜா, அப்துல் ரகுமான் ஆகியோர் அடங்கியகுழுவினர் பெற்றுக்கொண்டனர்.
முதல் நாளான நேற்று நெல்லித்தோப்பு தொகுதி பழனி, முத்தியால்பேட்டை தொகுதி சரவணன், செந்தில்குமரன், சீனு பொண்ணு (எ) துரை, சங்கர் என்பவருக்காக
ஆனந்தபாபு, செந்தில்குமரன், நெடுங்காடு தனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, கதிரவன் ஆகிய 8 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
பின்னர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியதா வது:
கட்சியினர் உற்சாகத்துடன் வந்து விருப்ப மனுகளை அளிக்கின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியாக தொடர்கிறது. எங்கள் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். 24 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம்.
இங்கு பாஜக, பிரதமர் மோடி மீதான எதிர்ப்பலை நாடாளுமன்ற தேர்தலைவிட அதிகமாக வீசுகிறது. இதனால் புதுச் சேரியில் பாஜகவுக்கு இடமில்லை. அவர் களின் கூட்டணியில் இருக்கின்ற என்ஆர் காங்கிரஸ், அதிமுகவினருக்கும் வெற்றிக்கு வாய்ப்பில்லை.
காங்கிரஸ் - திமுக கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ், திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து விட்டுக்கொடுத்து செயல்படுவோம். அவர்கள் அதிக தொகுதிகளைக் கேட்டாலும் பரிசீலனை செய்து வழங்குவோம். நாங்களும் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம். திமுக போட்டியிட விரும்பும் தொகுதியையும் கொடுப்போம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago