புதுவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் மது விற்பனை நேரம் குறைப்பு

By செய்திப்பிரிவு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் புதுச்சேரியில் மதுபானவிற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று முன்தினம் முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும், மது விற் பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக் கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக் கப்பட்டு, இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே மதுக் கடைகள் திறந்திருக்க வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று (நேற்று முன்தினம்) இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மதுபான கடைகள், கள் மற்றும் சாராய கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும். இதேபோல் மதுபானங்களை அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் வைத்திருக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

இதேபோல் கலால் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், புதுச்சேரி அரசு கலால்துறையில் தேர்தல் தொடர்பான கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அரை 24 மணி நேரமும் செயல்படும். வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான சாராயம், மது விநியோகம், கடத்தல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்0413-2252847 என்ற எண்ணில் தெரிவிக் கலாம். பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தரும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி கலால்துறைக்கு புகார் தெரிவிக்கலாம். அவர்களின் விவரங்களும் ரகசியம் காக்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்