கரோனா விதிமுறை மீறல் தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.22.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் இருந்தால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறை களை முறையாக கடைபிடிக்க வில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்பேரில் மாவட்டம் முழுவதும் வருவாய் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் அவ்வப்போது ஒன்றிணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின்போது விதிமுறை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனா விதிமுறை மீறல் தொடர்பாக ரூ.22 லட்சத்து 56 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது, என மாவட்ட சுகாதாரத் துறை யினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago