கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசி மக திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. 19-ம் தேதி கொடியேற்றமும், 25-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டுறவு சங்க நிர்வாகி விசிகே.ஜெயராஜ், ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோயிலின் வீதிகளை சுற்றி தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. தொடர்ந்து, இரவு வண்டிக்கால் பார்த்தல் நடைபெற்றது. நாளை(மார்ச் 1) மாலை 6.30 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடை பெறும். மார்ச் 8-ம் தேதி புஷ்ப யாகத்துடன் விழா நிறைவடைகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago