கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதி கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆட்சியரிடம் வலியுறுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, ‘‘சூலூர் வட்டம் செம் மாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு அருகில் உள்ள நீரோடைப் பகுதியில் இருந்து மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து, சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களைத் தின்று நாசமாக்கி விடுகின்றன. இதைத் தடுக்க வனத் துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றார்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் வேணுகோபால் கூறும்போது, ‘‘ஆலாந்துறை அருகேயுள்ள சென்னனூரைச் சேர்ந்த விவசாயிஒருவரது 1.85 ஏக்கர் நிலம், ஆதிதிராவிட நலத் துறையினரால் 29வருடங்களுக்கு முன்பு கையகப் படுத்தப்பட்டது. இதுவரை அந்த விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. இதுபோல, விவசாயிகள் நிலத்தை கையகப் படுத்தும்போது, அதற்கான இழப் பீட்டைஉடனடியாக வழங்க வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு விவசாயிகள் ‘‘வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைகாப்பாற்ற அரசு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். கோடை காலத்தில் மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.
விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள், புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago