கோவை மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலரு மான பெ.குமாரவேல் பாண்டியன் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல்செய்தார்.
தேர்தல் நேரம் என்பதால் புதிய திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி மற்றும் மூலதன வருவாய் சேர்த்து மொத்தம் ரூ.2,630.20 கோடி வருவாயாகவும், மொத்த செலவு ரூ.2,629.15 கோடியாகவும் உள்ளது. ரூ.1.05 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வருவாய் ரூ.2,156.18 கோடியாகவும், செலவு ரூ.2,155.04 கோடியாகவும், உபரி ரூ.1.14 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago