சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் பணியை, சென்னை சீர்மிகு நகரம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து சிட்டிஸ் திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றன.
இதன் முதல்கட்டமாக, அனைத்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க 3 நாள் பயிற்சிப் வகுப்புகள் நடக்க உள்ளன. இந்த பயிற்சி வகுப்பை கூடுதல் தலைமைச் செயலாளரும், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநருமான வெ.இறையன்பு நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் போர்டுகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், அண்ணா மேலாண்மை நிறுவன கூடுதல் இயக்குநர் எஸ்.ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago