திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நடப்பு ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை 9 மணியளவில் கல்யாண சுந்தரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தைக் காண நேற்று காலை 8 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.
இதன்படி, திருக்கல்யாண வைபவத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், நேற்று நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
18 திருநடனம்
இதைத் தொடர்ந்து, தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று கொடி இறக்கம் நடைபெற உள்ளது. நாளை தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம் மற்றும் 18 திருநடனத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago