புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ 1.40 குறைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம்தேதி புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி துணைநிலை ஆளுநர் வாட் வரி விகிதத்தை 2 சதவீதமாக குறைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 40 காசுகள் அளவில் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டொன்றுக்கு சுமார்ரூ. 71 கோடி வரை பயன் மக்களுக்கு கிடைக்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago